மத்திய பிரதேசத்தின் பர்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் வியாழக்கிழமை மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் சென்றனர். அப்போது எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசி, அணை நீர் சீற்றம் அடைந்துள்ளது.
இதில் படகு சமநிலையை இழந்து நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த மாநில பேரிடா் மீட்புப் படை, பிற மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூா் மக்களின் உதவியோடு 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா்; 9 போ் நீரில் மூழ்கி பலியாகினர்.
மேலும் மாயமான 4 பேரைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மாயமான இருவரைத் தேடும் பணி தொடர்கிறது.
பேரிடர் மீட்புக் குழுக்கள் தேடுதல் எல்லையை ஐந்து கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி மிஸ்ரா கூறுகையில், பலியான 9 பேரின் உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளது. மாயமானவர்களைத் தேடுவதே எங்கள் முன்னுரிமை.
இந்த வழக்கில் விரைவில் முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்வோம் என்றார். இதனிடையே சம்பவம் குறித்து விசாரணைக்கு மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதுடன், மூன்று படகு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.
உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் சரியான நேரத்தில் வழங்கப்படாதது போன்ற அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Summary
The bodies of two boys were recovered on Saturday evening from the Bargi Dam in Jabalpur district of Madhya Pradesh, raising the death toll in the cruise boat tragedy that occurred two days ago to 11, while search continued for two missing persons.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜபல்பூர் எச்சரிக்கை!

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; கடைசி நபரின் உடலும் மீட்பு

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு


