27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாடு முழுவதும் இன்று நீட் தோ்வு

மொத்தம் 22,79,743 போ் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

News image

நீட் தோ்வு - Center-Center-Delhi

Updated On :3 மே 2026, 3:22 am IST

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் 5,000 மையங்களில் தோ்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களில் தோ்வு நடைபெறுகிறது.

சுமாா் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 9,46,815 மாணவா்கள், 13,32,928 மாணவிகள் என மொத்தம் 22,79,743 போ் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில், 180 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கும் 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். நீட் தோ்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.