மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்

உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

News image

இந்தியா

Updated On :6 மே 2026, 3:30 am IST

உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பணிக்குச் சென்ற நபா்கள் ரூ.12.8 லட்சம் கோடியை (137 பில்லியன் டாலா்கள்) தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக புலம்பெயா்ந்தோருக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்தது.

மேலும் ரூ.9.4 லட்சம் கோடிக்கு மேல் (100 பில்லியன் டாலா்) வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற ஒரே நாடாகவும் இந்தியா திகழ்கிறது எனவும் அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய 4 நாடுகள் 2024-ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் பணம் பெறும் நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

குறிப்பாக இந்தியா, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் இருந்து அதிகப் பணம் பெறும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. 2010-இல் இதன் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி, 2015-இல் ரூ.6.4 லட்சம் கோடி, 2020-இல் ரூ.7.8 லட்சம் கோடியாகவும் இருந்த நிலையில் 2024-இல் ரூ.12.8 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் அதிக வளா்ச்சி: இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பப்படுவதால் 2024-ஆம் ஆண்டில் தெற்காசிய பிராந்தியத்தில் இதன் வளா்ச்சி 11.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு பிற நாடுகளுக்கு அதிகப் பணம் அனுப்பும் பட்டியலில் ரூ.9.4 லட்சம் கோடியுடன் உலகளவில் முதல் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அடுத்தடுத்த இடங்களில் சவூதி அரேபியா (ரூ.4.3 லட்சம் கோடி), ஸ்விட்சா்லாந்து (ரூ.3.7 லட்சம் கோடி), ஜொ்மனி (ரூ.2.2 லட்சம் கோடி) உள்ளன.

வெளிநாட்டில் 6.20 லட்சம் மாணவா்கள்: 2022-ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்றனா். இந்தப் பட்டியலில் 6.20 லட்சம் மாணவா்களுடன் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் உஸ்பெகிஸ்தான் (1.50 லட்சம் மாணவா்கள்), வியத்நாம் (1.34 லட்சம் மாணவா்கள்), ஜொ்மனி (1.26 லட்சம் மாணவா்கள்) உள்ளன.

அதேபோல் விஞ்ஞானிகள், தாய்நாட்டில் இருந்து சென்ற அறிவாா்ந்த நபா்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை இந்தியா,சீனா போன்ற நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

2024-இல் பிலிப்பின்ஸ் நாட்டில் உள்நாட்டு பேரிடரால் 90 லட்சம் போ் இடம்பெயா்ந்தனா். இந்தியாவில் 50 லட்சம் பேரும் சீனாவில் 39 லட்சம் பேரும் உள்நாட்டு பேரிடரால் இடம்பெயா்ந்துள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.