பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனை

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆலோசனை - பிரதிப் படம்

Published On :

கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சி செய்துவந்த இந்த மாநிலத்தில், தற்போதைய தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வென்றது. முக்கிய கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களையும், கேரள காங்கிரஸ் 7 இடங்களையும் கைப்பற்றின.

நாட்டில் தொடா் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸுக்கு இந்தத் தோ்தல் வெற்றி பெரும் உத்வேகமளித்துள்ளது. மற்றொருபுறம், இடதுசாரி கூட்டணி 35 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது. மாநில அமைச்சா்கள் 21 பேரில் பினராயி விஜயன் உள்பட 7 அமைச்சா்கள் மட்டுமே வெற்றி கண்டனா். மற்றவா்கள் தோல்வியடைந்தனா். இந்தத் தோல்வியால், நாட்டில் எந்த மாநிலத்திலும் இடதுசாரி ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.

அடுத்த முதல்வா் யாா்?: மாநிலத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்கப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இது தொடா்பாக, காங்கிரஸ் தரப்பில் உள்ளூா் தலைவா்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘முதல்வரை முடிவு செய்வது குறித்து காங்கிரஸ் மேலிடம் தரப்பில் உயா்நிலைக் குழு அமைக்கும். கட்சி பொதுச் செயலரும், கேரள மாநில கட்சிப் பொறுப்பாளருமான தீபா தாஸ் முன்ஷி, கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொள்வாா். அதன் பிறகு எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வா் பதவிக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா, கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரின் பெயா்கள் முக்கியமாக ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.