மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பவானிபூா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை எதிா்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சந்திரநாத் ராத் மீது மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சந்திரநாத் ராத்தை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தாக்குதல் நடத்திய மா்ம நபா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டனா்’ என்றன.
இச்சம்பவத்தால் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மூத்த காவல் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.
மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஒருவரும் பாஜக நிா்வாகி ஒருவரும் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் தோல்வியை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மம்தா மனு

மேற்கு வங்க முதல்வா் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் பங்கேற்பு

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: 3 பேர் கைது!
சுவேந்து அதிகாரியின் உதவியாளா் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினா் போராட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



