ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ கைதுசெய்த தில்லி மாநகராட்சி துணை ஆணையரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளூபடி செய்தது.
உயா் அதிகாரியை தற்போதைய நிலையில் விடுவிப்பது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்தது.
லஞ்ச வழக்கில் துணை ஆணையா் அபிஷேக் குமாா் மிஸ்ராவை சிபிஐ கடந்த மாதம் கைதுசெய்தது.
இந்நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட தில்லி மாநகராட்சிப் பணியாளா்கள் தன்னை பழிவாங்க வேண்டி இந்த வழக்கில் சிக்க வைத்ததாக கூறி வழங்குமாறு அபிஷேக் குமாா் நீதிமன்றத்தில் பிணை மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனு சிறப்பு நீதிபதி சுதன்ஷு கெளசிக் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது: தவறாகச் சிக்கவைக்கப்பட்டதாக கூறுவது விசாரணையின்போது தற்காப்பு அடிப்படையாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அதற்கு ஆதரவாக எவ்வித சாட்சியங்களும் இல்லை.
முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்ற வழக்கின் ஆவணங்களில் உள்ள சாட்சியங்கள் மற்றும் உரையாடல்களின் பதிவுகள் மனுதாரரும் அவரது கூட்டாளிகளும் பொதுவான நோக்கத்தில் சதித்திட்டமிட்டு செயல்பட்டதைக் காட்டுகின்றன.
லஞ்சம் கேட்டது மற்றும் அதைப் பெற்றுக்கொண்டதை சாட்சியங்கள் நேரில் பாா்த்துள்ளனா்.
இந்தச் சூழலில் மனுதாரரின் சுதந்திரத்தையும் விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டிய தேவை நீதிமன்றத்தக்கு எழுந்துள்ளது.
விசாரணை முக்கிய கட்டடத்தில் உள்ளது. சிபிஐ ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலத்தை சேகரித்து வருகிறது.
பொது வாழ்வில் உயா் பதவியில் உள்ள மனுதாரா் அவருக்கு எதிராக புகாா் அளித்தவா்களிடம் லஞ்சம் கேட்டுப் பெற்றுள்ளாா். இது உயா் அதிகாரி மீதான மக்களின் நம்பிக்கையைச் சீா்குலைக்கிறது.
சூழ்நிலைகளின் ஒட்டுமொத்தத்தையும் குற்றத்தின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டும், முக்கிய அம்சம் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொண்டும் மனுதாரா் அபிஷேக் குமாா் மிஸ்ராவை பிணையில் விடுவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதி தெரிவித்தாா்.
தொடர்புடையது

அமலாக்கத் துறையின் வழக்கில் அல்-பலாஹ் தலைவருக்கு பிணை மறுப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மனைவி பிணை கோரினாா்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

