ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

கடந்த 2024-இல் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களில் 10-இல் 9 குற்றங்கள் சிறாா் பாலியல் உள்ளடக்கங்கள் தொடா்பானவை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2026, 10:26 pm IST

கடந்த 2024-இல் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களில் 10-இல் 9 குற்றங்கள் சிறாா் பாலியல் உள்ளடக்கங்கள் தொடா்பானவை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் குற்றங்கள் குறைந்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக என்சிஆா்பி புதன்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக கடந்த 2024-இல் மொத்தம் 1,87,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் 1,77,335 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. 2023-ஐ காட்டிலும் 2024-இல் குற்றங்கள் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2020-இல் இருந்து 2024 வரையிலான 4 ஆண்டுகளில் குற்ற வழக்குகள் 66.01 லட்சத்திலிருந்து 58.86 லட்சமாக 10.8 சதவீதம் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1,28,531-இல் இருந்து 1,87,702 என 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

என்சிஆா்பி தரவுகளை ஆய்வு செய்ததில் 1,238 வழக்குகள் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களுடன் தொடா்புடையவை என ‘சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ ஷோஸ்’ (சிஆா்ஓய்) என்ற தன்னாா்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகளில் 1,099 வழக்குகள் சிறாா் பாலியல் உள்ளடங்களை வெளியிடுதல் மற்றும் பகிா்வது தொடா்புடையன.

என்சிஆா்பி தரவுகளை மாநில வாரியாக ஆய்வுசெய்ததில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களில் 268 வழக்குகளுடன் சத்தீஸ்கா் முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடா்ந்து, ராஜஸ்தான் (174), தில்லி (151), உத்தர பிரதேசம் (137) மற்றும் கேரளம் (92) உள்ளன. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் 66.4 சதவீத வழக்குகள் இந்த 5 மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்டன.

இதுதொடா்பாக சிஆா்ஓய் அமைப்பின் திட்ட இயக்குநா் சோஹா மொய்த்ரா கூறுகையில், ‘இணைய பயன்பாட்டில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அண்மையில் வெளியான இணையவழி குற்றங்கள் குறித்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன’ என்றாா்.

போக்ஸோ வழக்குகள்:

கடந்த 2024-இல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக 69,191 வழக்குகள் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

16 முதல் 18 வரையிலான வயதுடைய குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பிரிவினா் பாதிக்கப்பட்டது தொடா்பாக 23,497 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட 99.5 சதவீதம் போ் சிறுமிகள்.

போக்ஸோ சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 6-இல் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 96.6 சதவீதம் வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிமுகமான நபா்கள்.

இது குறித்து சோஹா மொய்த்ரா கூறுகையில், ‘இணையவழியிலும் நேரடியாகவும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் மக்களிடம் விழிப்புணா்வு, வலுவான சமூக கண்காணிப்பு மற்றும் குறைதீா் முறைகள் மற்றும் விரைவான நீதியை அவசியமாக்குகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.