ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது குறித்து...

Andhra Govt

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு. - DNS

Published On :14 மே 2026, 5:00 pm IST

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைத்துள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடால், வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமெனவும், பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனவும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைக்குமாறு அதிகாரிகளுக்கு புதன்கிழமை (மே 13) அன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து வெறும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டிலிருந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் சந்திரபாபு உடன் வெறும் 4 வாகனங்கள் மட்டுமே சென்றதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Andhra Pradesh CM Chandrababu Naidu has reduced the number of vehicles in his security convoy by 50 percent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.