இந்திய வானிலை ஆய்வு மையம், செய்யறிவுடன் இயங்கும் இரண்டு புதிய வானிலை முன்கணிப்பு சேவை அமைப்புகளை தங்களது வானிலை ஆய்வுப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளது.
இது, குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதை நான்கு வாரங்களுக்கு முன்கூட்டியே கணித்து தெரிவிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த செய்யறிவு சேவையால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மிகுந்த பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக உத்தரப்பிரதேசத்தில் மிகுந்த துல்லியமான மழைப் பொழிவு குறித்து குறிப்பிட்ட இடம் மற்றும் மழை அளவு குறித்த முன்னறிவிப்பை கொடுக்கும் இரண்டாவது சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது, அடர்த்தியான கண்காணிப்பு வலையமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, 10 நாட்கள் வரை முன்கூட்டியே 1-கிமீ தொலைவுக்கு செயல்பட்டு மழை முன்னறிவிப்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளதாம்.
கண்காணிப்பு உள்கட்டமைப்பு தொடர்ந்து விரிவடைவதால், இதேபோன்ற சேவைகள் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை முயற்சியானது, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுடன் அதிதொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு, தானியங்கி மழைக் கண்காணிப்பு அமைப்பு, தானியங்கி வானிலை நிலையங்கள், டாப்ளர் வானிலை ரேடார்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான மழைப்பொழிவுத் தரவுத்தொகுப்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒருங்கிணைக்கிறது.
இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் தரவுகள் செல்போன் செயலி, எஸ்எம்எஸ் எச்சரிக்கை, வாட்ஸ்ஆப், கிசான் இணையதளம், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் சேனல்கள் வழியாக வெளியிடப்படவிருக்கின்றன.
இவை, காய்கறி சந்தைகள், இதர சந்தைகள், விவசாயக் குழுக்கள் போன்றவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

