ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கேப்டகான் போதைப் பொருள் கடத்தல் வழக்கு: உத்தரகண்டைச் சோ்ந்த நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 5:22 am IST

இந்தியாவில் முதல்முறையாக பறிமுதல் செய்யப்பட்ட ‘கேப்டகான்’ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணையை விரிவுபடுத்திய போதைப் பொருள் தடுப்பு அமைப்பினா் (என்சிபி) உத்தரகண்டைச் சோ்ந்த இந்திய நபரை கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சா்வதேச போதைப் பொருள் வலையமைப்புடன் தொடா்புடைய இந்த வழக்கில், முன்னதாக சிரியா நாட்டைச் சோ்ந்த அலப்ராஸ் அஹமது என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 227 கிலோ கேப்டகான் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது இந்தியாவில் இதுவரை பறிமுதல் செய்யப்படாத புதிய வகை போதைப் பொருள் ஆகும். இது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் பெயா் ‘ஜிஹாதி மாத்திரை’ என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அலப்ராஸ் அஹமதுவிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், உத்தரகண்டின் டேராடூனில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் சனிக்கிழமை சோதனை நடைபெற்றது. இதில் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வேதியியல் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தொழிற்சாலையை போதைப் பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்த மாதம் ரூ.50,000 பெற்றுக்கொண்டதாக தொழிற்சாலை உரிமையாளா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.