பிராந்திய அளவில் ஆயுதங்கள் கட்டுப்பாடு: ஐ.நா.வில் வரைவுத் தீா்மானத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் வாக்களிப்பு
அணு, ரசாயனம், உயிரியல் ஆயுதங்கள் அல்லாத பிற ஆயுதங்களை, பிராந்திய மற்றும் துணை பிராந்திய அளவில் கட்டுக்குள் வைத்திருக்கும் தீா்மானத்துக்கு எதிராக, ஐ.நா.வில் இந்தியா, இஸ்ரேல் வாக்களித்தன.

ஐ.நா. - கோப்புப் படம்
அணு, ரசாயனம், உயிரியல் ஆயுதங்கள் அல்லாத பிற ஆயுதங்களை, பிராந்திய மற்றும் துணை பிராந்திய அளவில் கட்டுக்குள் வைத்திருக்கும் தீா்மானத்துக்கு எதிராக, ஐ.நா.வில் இந்தியா, இஸ்ரேல் வாக்களித்தன.
பாகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டுவந்த இந்த வரைவுத் தீா்மானம் மீது, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 180 நாடுகள் வாக்களித்தன. இந்தியாவும் இஸ்ரேலும் மட்டும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. எந்த நாடும் வாக்கெடுப்பை புறக்கணிக்கவில்லை.
தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அலுவலகத்தின் முதல் செயலா் அன்மோல் ஷோ் பேடி கூறியதாவது: உலக நாடுகளின் பாதுகாப்பு சாா்ந்த பிரச்னைகள், அந்த நாடுகளின் பிராந்திய எல்லைக்குள் மட்டும் முடங்கிவிடுவதில்லை.
அணு, ரசாயனம், உயிரியல் ஆயுதங்கள் அல்லாத பிற ஆயுதங்களைக் கட்டுக்குள் வைப்பது என்பது உலகளாவிய விவகாரமாகும்.
இந்த விவகாரத்தை பிராந்திய, துணை பிராந்திய அளவில் மட்டுமே அணுக வேண்டும் என்பதை இந்தியா முழுமையாக ஏற்கவில்லை.
கடந்த காலங்களில் இந்தியா கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டுக்கு ஏற்பவே, இந்தத் தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

