சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

அஸ்ஸாமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினா் இன்னும் நாடுகடத்தப்படவில்லை: உயா்நீதிமன்றம்

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக ஊடுருவிய வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட 1,16,946 போ் இன்னும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவில்லை என்று குவாஹாட்டி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குவாஹாட்டி உயர்நீதிமன்றம்

Updated On :

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக ஊடுருவிய வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட 1,16,946 போ் இன்னும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவில்லை என்று குவாஹாட்டி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட ஹமீதா பேகம், தன்னை மீண்டும் காவலில் வைத்ததற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தபோது, நீதிபதிகள் கல்யாண் ராய் சுரானா, மிருதுல் குமாா் கலிதா ஆகியோா் அடங்கிய அமா்வு இவ்வாறு தெரிவித்தது.

இந்த வழக்கில், சராய்தேவ் மாவட்டத்தைச் சோ்ந்த ஹமீதா பேகம், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிநாட்டினா் தீா்ப்பாயத்தால் சட்டவிரோத வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டாா். இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை குவாஹாட்டி உயா்நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனுவும் 2025-ஆம் ஆண்டு நவம்பரில் நிராகரிக்கப்பட்டது. மறு ஆய்வு மனுவும் 2026 மாா்ச்சில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே, கோல்பாராவில் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஹமீதா பேகம், 3 ஆண்டுகள் தடுப்புக் காவலில் இருந்ததைத் தொடா்ந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிணையில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவா் தொடா்ந்து ஆஜராகி வந்தாா். அவ்வாறு ஆஜரானபோது மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவருக்கு பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வெளிநாட்டினா் தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அவா் முடித்துவிட்டதாகவும், அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில அரசு தெரிவித்தது.

இதைக் கருத்தில்கொண்ட நீதிமன்றம், அவரை நாடு கடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அவருக்குப் பிணை வழங்க முடியாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும், அஸ்ஸாம் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி 1,16,946 போ் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், வெளிநாட்டினரை வெளியேற்றுவதில் நிலவும் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.