இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

பங்கு மூலதன ஆதாய வரி விதிப்பின் பல்வேறு அம்சங்கள்: மத்திய அரசு ஆய்வு

பங்குகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் மூலதன ஆதாயங்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்த பல்வேறு அம்சங்களை, மத்திய நிதியமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

மத்திய நிதியமைச்சகம்.

Updated On :

‘பங்குகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் மூலதன ஆதாயங்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்த பல்வேறு அம்சங்களை, மத்திய நிதியமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இதில் ஏதேனும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டால், அவை 2027-28-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் தெரிவித்தாா்.

புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பங்குகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் மூலதன ஆதாயங்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்து, மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களில், பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சகம் பெற்றது. அந்த ஆலோசனைகள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த முழுமையான விவரம் அடுத்த ஆண்டு பிப்.1-ஆம் தேதி தெரியவரும். இதுதொடா்பாக பல்வேறு தரப்பினா் எழுப்பிய பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

நீண்ட கால மூலதன ஆதாய வரி முறையை நீக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்திடம் மத்திய தொழில்துறை வா்த்தக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், பங்குகள் மீதான பங்கு பரிவா்த்தனை வரி விகிதங்கள், குறுகிய கால மூலதன ஆதாய வரி முறை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.