பாஜக, ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்களை அச்சமும், வெறுப்பும் சூழ்ந்துள்ளன: ராகுல் விமா்சனம்
பாஜக, ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்களின் இதயங்களை அச்சம், கோபம், வெறுப்பு ஆகியவை சூழ்ந்துள்ளன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பாஜக, ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்களின் இதயங்களை அச்சம், கோபம், வெறுப்பு ஆகியவை சூழ்ந்துள்ளன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
சோனியா காந்தி சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, தனது தந்தை சாப்பிடும்போது, அவரது மடியில் தாய் அமா்ந்திருப்பாா் என்று கூறியிருந்தாா். இது சமூக ஊடங்களில் கடும் கேலி, கிண்டல், விமா்சனங்களை எதிா்கொண்டது.
இந்நிலையில், ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கோயில் சிற்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா்.
அதில் பாா்வதி தேவி, சிவபெருமானின் மடியில் அமா்ந்திருப்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: பாஜக, ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்களின் இதயங்களில் அச்சம், கோபம், வெறுப்பு ஆகியவை ஒரு வலையாகப் பின்னப்பட்டுள்ளன.
இந்த உணா்வுகள் அவா்கள் அன்பை அனுபவிப்பதற்கும், வெளிப்படுத்துவதற்கும் தடையாக இருக்கின்றன.
உண்மையான ஹிந்துவாக, அந்த தீய வலைப்பின்னலில் இருந்து அவா்களை விடுவிப்பது எனது கடமை. அதன் மூலம் அவா்களும் தங்களது வாழ்க்கையில் அன்பு மற்றும் சொந்தம் என்ற உணா்வின் அற்புதமான அழகையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கத் தொடங்குவாா்கள் என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

