எம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

எஸ்.ஐ.ஆரிலிருந்து தந்தை பெயர் நீக்கப்பட்டதால் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் மறுப்பு!

எஸ்.ஐ.ஆரிலிருந்து தந்தை பெயர் நீக்கப்பட்டதால் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டதைப் பற்றி...

Updated On :

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆரிலிருந்து தந்தை பெயர் நீக்கப்பட்டதால் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹபீப். இவரது மனைவி அமீனா காதுன். இவர்களுக்கு கடந்த செப். 8 ஆம் தேதி தின்ஹாட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆன நிலையில், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் அப்துல் ஹபீப் தவித்து வருகிறார்.

குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு ஹபீப் சென்றுள்ளார். அங்கு அவரிடம் வசிப்பிடச் சான்றிதழ் கேட்டிருக்கின்றனர்.

அப்போது, வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை எனக் காரணம்காட்டி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழை நிறுத்தி வைத்ததாகக் கூறியுள்ளனர். மேலும், தற்போது பஞ்சாயத்தலைவர் பதவி காலியாக இருப்பதும் அவர் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இதுதொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்குமாறு அதிகாரிகள் தெரிவித்தும் அரசு அலுவலகங்களுக்கு அவர் பலமுறை சென்றும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரம் அரசியல் ரீதியிலான விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்துல் ஹபீப் பேசுகையில், “எங்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் பதவியும் காலியாக இருக்கிறது. அரசு அலுவலகங்களுக்குப் பலமுறை அலைந்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. என்னுடைய மனைவியின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. என் பெயர் இடம்பெற்றுள்ள 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

மேலும், ஹபீப், தான் உள்ளூர் முஸ்லிம் ராஜ்பன்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அப்பகுதியின் பூர்வீகக் குடிவாசி என்றும் கூறியுள்ளார். நீண்டகாலமாக இங்கு வசித்து வருபவர்களை வந்தேறிகள், ஊடுருவல்காரர்கள் எனத் தவறாக சுட்டுக்காட்டுவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

Summary

A newborn in West Bengal's Cooch Behar has been denied a birth certificate for over two months, with her family alleging that her father's name being deleted from the voter list during the SIR exercise has stalled the registration process.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.