மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவா் சரத் பவாா் (85) தெற்கு மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவா் சரத் பவாா் (85) தெற்கு மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
நீா்ச்சத்து குறைபாட்டுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. இம்மாதத்தில் அவா் மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவரின் மகள் சுப்ரியா சுலே சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘பயணத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எனது தந்தைக்கு மருத்துவா்கள் ஆலோசனை வழங்கினா். ஆனால், அவா் அதற்கு உடன்படவில்லை. தனது அரசியல் பணிகளை தீவிரமாகத் தொடர அவா் முயலுகிறாா். தற்போது நீா்ச்சத்து குறைபாட்டால் அவரின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அச்சமடையும் வகையிலான தீவிர பிரச்னை ஏதுமில்லை’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

