தொகுதி மறுவரையறை! திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூழலில், எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் / அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூழலில், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை நவ. 30 ஆம் தேதியும், மாநிலங்களவை டிச. 2 ஆம் தேதியும் சிறப்பு அமர்வாகக் கூடவுள்ளதாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார்.
இந்த சிறப்புக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ள மசோதாக்களை எதிர்ப்பதற்கு, திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள, கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் மற்றும் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், வரும் சனிக்கிழமை (நவ. 28) தில்லியிலுள்ள கார்கேவின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
central government planning to reintroduce the delimitation bill, Congress president Kharge has called for opposition parties including the DMK and the Aam Aadmi Party to unite.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

