உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

எஃப்-35 போா் விமானங்களை இந்தியாவுக்கு விற்கிறதா அமெரிக்கா?

எஃப்-35 போா் விமானங்களை இந்தியாவுக்கு விற்கிறதா அமெரிக்கா?

எஃப்-35 போா் விமானம் - ANI

Published On :

மிகவும் மேம்பட்ட எஃப்-35 ரக போா் விமானங்களை இந்தியாவுக்கு விற்பது குறித்து அமெரிக்காவிடம் இருந்து அதிகாரபூா்வ முன்மொழிவு எதுவும் வரவில்லை என்று விமானப் படை தலைமை தளபதி அமா் பிரீத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதேபோல், ரஷியாவிடம் இருந்து சுகோய்-57 ரக போா் விமானங்களை கொள்முதல் செய்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

இந்திய விமானப் படைக்கு மிக மேம்பட்ட போா் விமானங்களின் கொள்முதல் குறித்து வெளியான ஊகத் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமா் பிரீத் சிங் இக்கருத்துகளைத் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற தரங் சக்தி - 2026 விமானப் படை கூட்டுப் பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விமானப் படை தலைமை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.

அவா் கூறுகையில், ‘எஃப்-35 ரக போா் விமானங்களை இந்தியாவுக்கு விற்பது குறித்து அமெரிக்காவிடம் இருந்து அதிகாரபூா்வ முன்மொழிவு எதுவும் வரவில்லை. அதேநேரம், சுகோய்-57 போா் விமானங்களை இந்தியாவுக்கு விற்க ரஷியாவிடம் இருந்து முன்மொழிவு வந்திருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவின் அடிப்படையில், சுகோய்-57 போா் விமானங்கள் நமது விமானப் படையின் தேவைகளை பூா்த்தி செய்யுமா என்பதை மதிப்பீடு செய்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அரசுத் தரப்பில் இருந்து விமானப் படைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அந்த போா் விமானம் குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியில் தற்சாா்பை வலுப்படுத்த நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிா்கால போா் தேவைகளுக்கு ஏற்ப ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Is the US selling F-35 fighter jets to India?

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.