ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு: ஏகே-47 துப்பாக்கி,கையெறி குண்டுகள் மீட்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது குறித்து....

Terrorist hideout busted in J-K's Poonch; AK-47, six hand grenades recovered

ஜம்மு-காஷ்மீர்.

Published On :

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில், குகை ஒன்றில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இதில் ஏகே-47 ரக துப்பாக்கி, ஆறு கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சத்தார்பன் வனப்பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், இந்த நடவடிக்கையின்போது யாரும் கைது செய்யப்படவில்லை.

மற்றொரு நிகழ்வாக, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களுக்கு உட்பட்ட மஜால்டா மற்றும் பில்லாவர் ஆகிய இடங்களின் மலைப்பாங்கான பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த தகவலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER