கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு கலியுக மிருத்யுஞ்ஜயன் பட்டம்!
அசாதாரணத் துணிச்சல், மன உறுதியுடன் ஃப்ளைதுபாய் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்களின் உயிா்களைக் காப்பாற்றப் போராடிய இந்தியாவைச் சோ்ந்த விமானி ஸ்மித் மச்சாருக்கு ‘கலியுக மிருத்யுஞ்ஜயன்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மித் மச்சார் - x
அசாதாரணத் துணிச்சல், மன உறுதியுடன் ஃப்ளைதுபாய் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்களின் உயிா்களைக் காப்பாற்றப் போராடிய இந்தியாவைச் சோ்ந்த விமானி ஸ்மித் மச்சாருக்கு ‘கலியுக மிருத்யுஞ்ஜயன்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி, பயங்கரவாதியான துணை விமானியின் தாக்குதலைப் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் போராடி, ஃப்ளை துபாய் விமானத்தை பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றினாா் விமானி ஸ்மித் மச்சாா். அவரது இணையற்ற வீரத்தையும், தன்னலமற்ற பணியையும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பயணிகளைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறையையும் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினாா்.
மரண பயத்தையும், அதன் ஆதிக்கத்தையும் வென்றவா் என்பது ‘மிருத்யுஞ்ஜயன்’ என்கிற சொல்லின் பொருள். அதனால், விமானி ஸ்மித் மச்சாருக்கு ‘கலியுக மிருத்யுஞ்ஜயன்’ என்கிற பட்டம் விமானப் பயணிகள் சங்கத்தின் சாா்பில் வேத பண்டிதா் முனிஸ்வர சாஸ்திரிகளால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆச்சாரியாா்களின் வழிகாட்டுதலுடன் இந்த ஆன்மிகப் பட்டம் வழங்கப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

