தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயரில் வீட்டுக் கடன் மோசடி: 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயரில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியாக வீட்டுக் கடன்கள் பெற்றது தொடர்பான சோதனை குறித்து...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயரில் வீட்டுக் கடன் மோசடி புகாரில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - டிஎன்எஸ்

Updated On :

புது தில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயரில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியாக வீட்டுக் கடன்கள் பெற்றது தொடர்பான பணமோசடி வழக்கில், தில்லி-என்சிஆர், பெங்களூரு மற்றும் சண்டிகர் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வீடு, அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த அதிரடி சோதனை அந்த்ரிக்ஷ் புரோமோட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சன்ஷைன் இன்ஃப்ராவெல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயரில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியாக வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டதாகவும், அந்த பணம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிறுவனங்களின் பங்கு மற்றும் சட்டவிரோத பணம் பரிமாற்றம் குறித்தும் மத்திய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்தச் சோதனையின்போது, ​​மோசடி குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்படலாம் என்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் கூறினார்.

The Enforcement Directorate (ED) on Friday conducted searches at 13 locations across Delhi-NCR, Bengaluru and Chandigarh in connection with a money laundering case relating to fraudulent NRI housing loans allegedly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.