அத்தியாயம் 30- வேலைக்குச் சேரும் வேளை

பல கட்டங்களைக் கடந்து, நிறுவனத்தின் நேர்முகத் தேர்வாளரின் நன்மதிப்பைப் பெற்று, இவர், இந்தப் பதவிக்குத் தகுதியானவர் என்ற நிலையை எட்ட, பல குணநலன்கள் தேவைப்பட்டது. அவற்றை

பல கட்டங்களைக் கடந்து, நிறுவனத்தின் நேர்முகத்  தேர்வாளரின் நன்மதிப்பைப் பெற்று, இவர், இந்தப் பதவிக்குத் தகுதியானவர் என்ற நிலையை எட்ட, பல குணநலன்கள்  தேவைப்பட்டது. அவற்றை அலசியாகிவிட்டது. ஆனால், அதற்கும் மேல், இன்னும் சில நிறைவுச் செய்திகள் இருக்கின்றன.

ஒரு நேர்முகத் தேர்வில் நமது உடல்மொழி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். உடல்மொழியில், நமது உடையலங்காரமும் அடங்கும்.  ஏனெனில் நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களில், உடையணியும் பாங்கை வைத்தே 65% பேரை வடிகட்டுகிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. மேலும் மிகுந்த நவநாகரீகமாக உடைகளோ,  டாட்டூக்களோ, 70% பேரை நிராகரிக்க வைக்கிறது. பளிச்சென்ற, PROFESSIONAL எனப்படும் தொழில்முறை உடைகள்தான் 96% நிறுவனங்களைக் கவர்கிறது. 

அதன்படி நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போதும், அங்கு அமர்ந்திருக்கும்போதும் என்னவெல்லாம் செய்யலாம்? எவையெல்லாம் செய்யக்கூடாது? என்று பார்ப்போம்.

செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை   

சரியான அளவுள்ள உடைகள் மிகுந்த இறுக்கமான உடைகள்   

பளிச்சென்ற வெளிர் நிற உடைகள் கருப்பு, அடர்த்தியான நிற உடைகள்   

கோடு, கட்டங்கள் போட்ட சட்டை பூக்கள், பெரிய படங்கள் கொண்ட சட்டை   

பெண்கள் சேலை, சுடிதார், டாப்ஸ் ஜீன்ஸ், டீஷர்ட், நாகரீக உடைகள்   

முடிந்தால், தகுந்த நிறத்தில் டை சம்பந்தமில்லாத நிறத்தில் டை   

பளிச்சென்ற முழுக்காலணிகள் விளையாட்டு ஷூக்கள், அடர் நிற ஷூ   

கைகளை சரியான விதத்தில் அசைத்துப் பேசுதல் கைகளை அதிகமாக ஆட்டிப் பேசுதல்   

கைகளைக் கோர்த்துக்கொள்ளுதல் கைகளைப் பிசைதல், மேசையைப் பிடித்தல்   

அழுத்தமாகக் கை குலுக்குதல், தொளதொளவென்று பிடிப்பில்லாமல் கைகுலுக்குதல்   

கைகளை நாற்காலியின் கைப்பிடியில் வைத்துக்கொள்ளுதல் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொள்ளுதல்   

கைகளை உடலின் எந்த பாகத்திலும் வைக்காமல் இருத்தல் தலை சொறிதல்,  நாசியில் வைத்தல்,   

நேர்முகத் தேர்வாளரின் கண் பார்த்துப் பேசுதல் வேறெங்கோ பார்த்துப் பேசுதல், கண்கள் அலைபாய்வது   

சொல்ல வந்ததை நிதானமாக, தெளிவாகச் சொல்வது பேசும்போது,-’ ம்…’ ’அது வந்து’, ’ACTUALLY ’போன்ற வார்தைகள் பயன்படுத்துவது   

தெரியவில்லை என்று தயக்கமின்றிச் சொல்வது தெரியும்.. ஆனால் மறந்துவிட்டது என்று சொல்வது   

கால்களை நேராகவும், நிலையாகவும் வைத்திருப்பது கால்களை ஆட்டிக்கொண்டிருப்பது   

புன்னகையுடன் இருப்பது ஒரு பரபரப்புடன், திகிலாகவே இருப்பது   

தலைமுடி சரியான அளவில் வெட்டியிருப்பது, முகம் பளிச்சென்று இருப்பது ஒழுங்கு செய்யப்படாத முடி, தாடி   

நகங்கள் முறையாக வெட்டியிருப்பது நீளமான, அழுக்கு சேர்ந்த நகங்கள்   

தேவைக்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது அடிக்கடி தண்ணீர் குடிப்பது   

நிறுவனத்தைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருப்பது நிறுவனத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதது   

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, பளிச்சென்ற ஃபைல் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஒழுங்கில்லாமல், கேட்கும்போது தேடித் தேடி எடுக்கும் அளவில் சான்றிதழ்கள்   

நிமிர்ந்து அமர்தல் சாய்ந்து, வசதியாக அமர்தல்,

தெளிவாக இலக்கணப் பிழையின்றிப் பேசுதல் இலக்கணப் பிழையுடன் சமாளித்து உளறுதல் இவையெல்லாம் கவனித்து,

நேர்முகத்தேர்வின் கடைசிக்கட்டத்திலும் வென்றுவிட்டால், இன்னும் ஒரே ஒரு விஷயம் பாக்கி இருக்கிறது. அது, பின்புலச் சோதனை! அதாவது ஒரு நிறுவனம், தான் தேர்ந்தெடுத்த நபரின் பின்புலம் எப்படிப்பட்டது என்று சோதிக்கும். அவர் கொடுத்திருக்கும் தகவல்கள் உண்மையா என்று சரிபார்த்துக்கொள்ளும். அதற்கு அவர்கள் ,

நாம் படித்த கல்லூரிக்கு அழைத்துப் பேச வாய்ப்பிருக்கிறது.

இதற்கு முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தை அழைத்து விசாரிக்க வாய்ப்பிருக்கிறது.

சில நேரங்களில், சில பெரிய நிறுவனங்கள் நம் சொந்த ஊருக்குச் சென்று அங்கிருக்கும் அக்கம்பக்கத்தவரிடம்கூட விசாரிக்கும் நடைமுறை உள்ளது. பின்புலச் சோதனை செய்யவென்றே சில நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நம்மைப்பற்றி விசாரித்து, நாம் கொடுத்த தகவல்கள் சரிதான், நம் குணம் , குடும்பம் ஆகியவை பற்றி நன்றாகச் சொல்லப்பட்டால் மட்டுமே வேலை உறுதியாகும். ஆகவே, ஒரு நிறுவனத்தில் சேரும்போது, நம்மைப்பற்றிய உண்மைத்தகவல்களை மட்டுமே கொடுக்கவேண்டும். அதுதான் என்றென்றும் நம் எதிர்காலத்துக்கு நல்லது!

ஆக, நேர்முகத்தேர்வு என்ற நேர் முக்கியத்தேர்வின் மூலம் ஒரு வேலைக்குச் சேரவரும் நபரிடம் ஒரு நிறுவனம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறது என்று பார்த்திருக்கிறோம்.

  • அறிமுகப்படுத்தும் முறை

  • சுயவிபரம்

  • கவனம்

  • தகவல்தொடர்பு

  • கற்பனைத்திறன்

  • முடிவெடுக்கும் திறன்

  • பொறுப்புணர்வு

  • சமயோசித அறிவு

  • நேர்மை

  • நேர நிர்வாகம்

  • கண்ணியம்

  • கோபமின்மை

  • விவாதப் பாங்கு

  • பதிலளிக்கும் விதம்

  • குழு மேலாண்மைத் திறன்

  • அனுசரிக்கும் குணம்

  • கருத்துச் செறிவு

  • நிதானம்

இவையெல்லாம் திருப்தியாக இருந்தால், நிறுவனம் ரத்தினக்கம்பளம் போட்டு ஒரு ஊழியரை வரவேற்கும். ஆனால், இன்றைய சூழலில், படித்தால் மட்டும் போதும். என்று நம் இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை மாற்றி, மேற்கண்ட திறன்களையும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று புரியவைக்கத்தான் இந்தத் தொடரை எழுதினேன்.

இன்று இந்தியாவின் வேலைத்தகுதி எனப்படும் EMPLOYABILITY நிலைமை மிகவும் பின் தங்கி உள்ளது. அதாவது, இந்தத் தொடரில் காணப்பட்ட குணாதிசயங்களுடன் 100க்கு 13 பேர்தான் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த விகிதம் 100க்கு 61 ஆக இருந்தது. இதுதான் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதைத்தான் SKILL GAP என்கிறார்கள்.  இந்தியா முழுவதும், அந்த இடைவெளியை நிரப்பும் வேலையைத்தான் என்போன்ற பயிற்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

ஒரு வேலையில் சேருவது என்பது அதுவும்  முதல் வேலையில் சேருவது என்பது மிகவும் கடினமாக இருக்கும் இதே சூழலில்தான், ஒரு ஆண்டு அனுபவம் கிடைத்தபின் அந்த நிறுவனத்தில் கற்றுக்கொண்டுவிட்டு, தனக்கு என்ன வேண்டுமென்று கேட்காமலேயே, அப்படியே தாவும் மனநிலையில் இன்றைய இளைய சமுதாயம் இருப்பதால்தான், நிறுவனங்களும் ஊழியர்களை நேசிப்பதை குறைத்துக்கொண்டுவிட்டன.

ஆகவே, எல்லாவற்றுக்கும் மேலாக, நாமாகத் தேர்ந்தெடுத்துத்தான் இந்த நிறுவனத்துக்கு விண்ணப்பித்தோம் .. கடினமான தேர்வுகளுக்குப் பிறகுதான் இங்கு நம்மை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார்கள். என் போன்ற திறமைசாலியை வேலைக்கு வைத்திருக்கும் இந்த நிறுவனம் மிகவும் உயர்ந்தது என்ற நேர்மறைச் சிந்தனையுடனும், தான் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தைப் பற்றிய பெருமையுடனும், நேசத்துடனும் முதல் நாள் மட்டுமல்ல.. ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் எவரும், வாழ்வின் வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டேதான் இருப்பார்கள்.

நேர்முகத்தேர்வு என்ற மலையேறும் வேலையை, எப்படியெல்லாம் செய்தால் உச்சியை அடையலாம் என்று எனக்குத் தெரிந்தவரை விளக்கியிருக்கிறேன். இதில் சொல்லாமல் விட்டது, நமது தொழில்நுட்பத் திறனை! அது கல்விச்சாலைகளில் கற்றுக்கொண்டிருக்கவேண்டிய திறமை! கல்விச்சாலை நேரடியாகக் கற்றுக்கொடுக்காத திறன்களைப்பற்றிதான் இந்தத் தொடரில் அலசினோம்.

இதில் சிறிதளவாவது கற்றுக்கொண்டு,  வேலை கிடைத்து, பதவி உயர்ந்து, நீங்களே ஒரு நேர்முகத்தேர்வு நடத்தவும், ஏற்கனவே நிறுவனத்தில் பணிபுரியும் நேர்முகத்தேர்வாளர்களுக்கும் இந்தத் தொடர் கொஞ்சமாவது உதவியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.

வாழ்க வேலையுடன் !!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com