சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: பள்ளிகளுக்கு இனறு விடுமுறை

இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை
Published on
Updated on
1 min read

இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிக அளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மண்சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (05.08.2025) ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும்.

மழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035- க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் எண் 9488700588 -க்கும் தகவல் அளிக்கலாம்.

வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உதகை கோட்டத்துக்கு 0423- 2445577, குன்னூா் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூா் கோட்டத்துக்கு 04262-261296, உதகை வட்டத்துக்கு 0423-2442433, குன்னூா் வட்டத்துக்கு 0423- 2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423- 2508123, கூடலூா் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூா் வட்டத்துக்கு 04262- 220734 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

தொலைபேசி எண்களில் பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com