6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!

சுருளி ராஜன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கட்டைக் குரல்.
6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!
Published on
Updated on
2 min read

சுருளி ராஜன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கட்டைக் குரல். கருப்பு வெள்ளைத் திரைப்படங்களிலும் சரி அதன் பிறகான வண்ணத் திரைப்படங்களிலும் சரி சுருளி ராஜன் எனும் சூறாவளி நடிகர் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் வெளுத்து வாங்கிய காலம் உண்டு. சுருளி ராஜனின் தனித்துவம் என்பது அவர் ஏற்று நடித்த விளிம்பு நிலை கதாபாத்திரங்கள். தன்னுடைய இயல்பான நடிப்பாலும், அச்சு அசல் நம் அண்டை வீட்டு மனிதர் போன்ற தோற்றத்தாலும், எவ்வித சமரசமும் அற்ற நடிப்பாலும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் அவர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார் சுருளி ராஜன். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. அவருக்கு சங்கரலிங்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் சுருளி என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார். பின்னாட்களில் அப்பெயர் தமிழகம் அறிந்த பெயராகப் போகிறது என்பதை அவரின் தந்தையார் பொன்னையா பிள்ளை அறிந்திருக்கவில்லை. பொன்னையா தேனியில் உள்ள விவசாயப் பண்ணையொன்றில் கணக்குப் பிள்ளையாக பணி புரிந்தார். தந்தையின் எதிர்பாராத மரணத்துக்குப் பின் சுருளி ராஜன் மதுரையில் உள்ள தமது சகோதரர் வீட்டுக்கு இடம்பெயர்ர்ந்தார். அங்கிருந்து சிறு தொழிற்சாலையில் பணி புரிந்தார். திடீரென்ற இடமாற்றம், தந்தையின் மறைவு, மனம் விரும்பாத பணிச் சூழல் என சுருளி ராஜன் அந்நாட்களில் மன சஞ்சலத்துக்கு உள்ளானார். அச்சமயத்தில்தான் தன்னார்வ நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு உற்சாகம் அளித்ததுடன் மன நிறைவும் தந்தது. மேடை நாடகங்களை விட திரைப்படங்களில் நடிப்பது சிறந்தது என அவருக்குத் தோன்றியதால், 1959-ம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ரயில் ஏறினார். 

கலைஞரின் காகிதப் பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதி வசூலுக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட "இரவும் பகலும்" (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே 'காதல் படுத்தும்பாடு' என்ற படத்திலும் நடித்தார். 1970-ல் திருமலை தென்குமரி, 1971ல் 'ஆதிபராசக்தி' என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப் பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். 1970-ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார். ம. எ. காஜா வின் 'மாந்தோப்புக் கிளியே' என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரானார். சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள் :

அக்கா, பத்ரகாளி, இன்ஸ்பெக்டர் மனைவி, ஜானகி சபதம், குமார விஜயம், மதன மாளிகை, மேயர் மீனாட்சி, மிட்டாய் மம்மி, நீ இன்றி நானில்லை, ஒரே தந்தை        
துணிவே துணை, உங்களில் ஒருத்தி, உறவாடும் நெஞ்சம், வாழ்வு என் பக்கம், ஆறு புஷ்பங்கள், ஆட்டுக்கார அலமேலு, அண்ணன் ஒரு கோயில், தீபம், துர்க்கா தேவி,
கேஸ்லைட் மங்கம்மா    , இளைய தலைமுறை, மதுர கீதம், முன்னொரு நாள், நீ வாழ வேண்டும், ஓடி விளையாடு தாத்தா, ஒளிமயமான எதிர்காலம், ஒருவனுக்கு ஒருத்தி, பாலாபிஷேகம், பெருமைக்குரியவள், ராசி நல்ல ராசி, சொன்னதை செய்வேன், சொந்தமடி நீ எனக்கு, தூண்டில் மீன், ஆயிரம் ஜென்மங்கள், அக்னி பிரவேசம், அண்ண லட்சுமி, அதைவிட இரகசியம், அவள் தந்த உறவு, பைரவி, சிட்டுக்குருவி, என் கேள்விக்கு என்ன பதில், இவள் ஒரு சீதை, கண்ணாமூச்சி, கண்ணன் ஒரு கைக்குழந்தை        
கராத்தே கமலா, மச்சானைப் பாத்தீங்களா, மக்கள் குரல், மனிதரில் இத்தனை நிறங்களா, மீனாட்சி குங்குமம், மேள தாளங்கள், ஒரு வீடு ஒரு உலகம், பஞ்சாமிர்தம், பாவத்தின் சம்பளம், ராஜாவுக்கு ஏத்த ராணி, ருத்ர தாண்டவம், சக்கைப்போடு போடு ராஜா, சங்கர் சலீம் சீமான், சொன்னது நீ தானா, டாக்ஸி டிரைவர், தாய் மீது சத்தியம்    
திருக்கல்யாணம், திரிபுர சுந்தரி, உனக்கும் வாழ்வு வரும்

சுருளி ராஜனுக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 1981-82-ம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது. தனது புகழின் உச்சியில் இருந்த 1980ம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.