26. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி:

கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அதிக தூரம் பயணித்தபடியே வேலை செய்வோருக்கு எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம் 
26. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி:

கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அதிக தூரம் பயணித்தபடியே வேலை செய்வோருக்கு எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம் 

பயணித்தபடி வேலைசெய்வோர்:


அதிக தூரம் பயணித்தபடி வேலை செய்வோர் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே பயணிப்போர்களுக்கு முதுகு வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் பயணிப்பதால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன. இதனால் உங்கள் முதுகெலும்பு வளைவுத்தன்மையை இழக்க நேரிடுகின்றது. அதேபோல் நீண்ட உட்கார்ந்தபடி பயணித்தாலும் கால்களுக்கு செல்லும்  பாதிக்கபடுகின்றது. அதாவது நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்காருவதால் உங்கள் கால்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றது. இதனால் நாளடைவில், கால் தசைகள் வலுவிழக்கின்றன. இதனாலேயே நீண்ட நேரம் பயணிப்பவர்களுக்கு கால் வலியும்,முதுகு வழியும் அதிகம் இருக்கும். அதேபோல் இவர்களுக்கு முதுகு வலி வர முக்கியக் காரணம், பயணம் செய்யும் பாதை(Road). ஏனெனில் நம் பாதைகள் முக்காவாசி குண்டும், குழியுமாகவே இருக்கின்றன. இப்படியான பாதைகளில் நீண்ட நேரம் பயணிப்பதால் நம் முதுகின் மீதான அழுத்தம் அதிகரிக்கின்றது. சில சமயங்களில் இந்த அழுத்தம் அதிகரித்து உங்கள் முதுகெலும்பில் அழுத்த எலும்பு முறிவு(Stress Fracture) ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதுபோன்று தொடர்ந்து பயணிப்பதால் உங்கள் முதுகெலும்பு நரம்புகளும் பாதிக்கப்படும். ஏனெனில் கால்களின் இயக்கம் அதிகமாக இருப்பதாலும் மற்றும் ஒரே விதமாக(Position) உட்கார்ந்து செல்வதாலும் இது ஏற்படும். அதேபோன்று இப்படி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தசைகள் மிகவும் கடினமாக இருக்கும். இதைக் குறைக்க Manual Therapy சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

இத்தகைய மாற்றங்களினால் உங்களுக்கு வலி, இயக்கக் குறைவு(Immobility), தசைகளின் இழுவைத் தன்மை குறைவு(Inflexibility) போன்றவை ஏற்படும். போகப் போக தசைகளின் மீதான அழுத்தம் அதிகமாகி 'Disc' ஐ அழுத்த ஆரம்பிக்கும். இதனால் உங்களுக்கு மறத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற வலி, வலுவிழப்பு(Weakness) போன்றவையும் ஏற்படும்.

இந்த வாரத்துடன் இக்கட்டுரை முடுவடைகிறது. இந்த கட்டுரை மூலம் உங்கள் உடலில் ஏற்படும் முதுகு வலி வைகைகள் மற்றும் அதற்குண்டான முழுமையான தீர்வு என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பேர்கள் என நான் நம்புகிறேன். அதேபோல் உங்கள் குழந்தைகளை எப்படி விளையாட்டு வீரராக்குவது என்பது பற்றியும் உங்களுக்குத் தேவையான உள்ளீடுகள் (Inputs) கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இது சம்பந்தமான எந்த ஒரு கேள்விகள் இருந்தாலும் நீங்கள் என்னை அலைபேசி மூலமாகவோ அல்லது மின் அஞ்சல்
மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்தக் கட்டுரைக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

முற்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com