22. வைட்டமின் டி பற்றாக்குறையானால் என்னென்ன பிரச்னை ஏற்படும்?

வைட்டமின் டி பற்றாக்குறை முதுகு வலி மட்டுமில்லாமல் அணைத்து தசை, எலும்பு வலிகளுக்கும் காரணம்.  
22. வைட்டமின் டி பற்றாக்குறையானால் என்னென்ன பிரச்னை ஏற்படும்?

வைட்டமின் டி பற்றாக்குறை முதுகு வலி மட்டுமில்லாமல் அணைத்து தசை, எலும்பு வலிகளுக்கும் காரணம். அது எப்படி என்பதை இவ்வாரத் தொடரில் பார்ப்போம்.

வைட்டமின் டி பற்றாக்குறையும், தீராத வலியும் 

ஆம், இன்றையக் காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட நாம் ஒவ்வொருவருக்கும் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இதில் வேடிக்கையான விஷயம், இந்தியா ஒரு சூரிய ஒளி அதிகம் கிடைக்கக் கூடிய வெப்ப மண்டல நாடு.

சூரிய ஒளிக்கும் வைட்டமின் டி க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? சூரிய ஒளிதான் வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப்பெரிய ஆதாரம். இதனால் தான் இதற்கு சன்ஷைன் வைட்டமின் என்று ஒரு பெயரும் உள்ளது. வைட்டமின் டி மட்டுமே தோலில் இருந்து உற்பத்தியாகும் ஒரே வைட்டமின். மற்ற வைட்டமின்கள் எல்லாம் பழங்கள், காய்கறிகள் மூலமே கிடைக்கின்றன. தோலில் இருந்து பெறப்பட்ட வைட்டமின் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மூளை, நரம்பு, தசை என உடலில் ஒவ்வொரு திசுவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

இதனால் வைட்டமின் டி குறைபாடு என்பது தசை பிடிப்பு அல்லது வலி, நரம்பு மண்டலத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக காரணமே தெரியாமல் உடலில் வலி இருந்தால் அதற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம். கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும் போது கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை குறைந்து எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இதனால் புற்றுநோய், ஆஸ்டியோபெராசிஸ் போன்ற பிரச்னை
வருவதற்கு காரணமாகிவிடுகிறது. 

வைட்டமின் டி குறைபாட்டை எப்படி கண்டறிவது?

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி குறைபாட்டை கண்டறிந்து விடமுடியும். ஒருவேளை நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் முதல்கட்டமாக உங்கள் மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரையின்பேரில், வைட்டமின் டி சத்து மாத்திரையையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர்தான் நீங்கள் எவ்வளவு அளவு மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறமுடியும்.

ஆறு மாதம் கழித்து வித்தியாசத்தை மீண்டும் ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதுதவிர, வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ள முட்டை, பால், மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் ஒரு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். 

வைட்டமின் டியின் நன்மைகள்;

  • முதுகு வலி ஏற்படுவதைக் குறைக்கிறது.
  • எலும்பு, பல், முடிக்கு பாதுகாப்பையும், இயங்க வழுவழுப்பையும் (லூப்ரிகன்ட்) அளிக்கிறது
  • திசுக்கள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. 
  • எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் வருவதைத் தடுக்கிறது.
  • மெனோபாசுக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com