வெய்யிலில் சிறிதுநேரம் இருந்துவிட்டு, நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?
உடலின் எண்ணற்ற வியக்கத்தக்க விஷயங்களில் கண்களும் அவற்றால் பார்க்கக் கூடிய திறனும் ஒன்று. பள்ளியில் கண்ணையும் காமிராவையும் ஒப்பிடுக? என்ற கேள்வியைப் படித்திருப்போம். உண்மையில் கண்கள் அதற்கும் மேலே நுணுக்கமான பணிகளைச் செய்கின்றன.
ஒளி அலைகளாகத்தான் பரவுகிறது என்று நாம் அறிவோம். கண்ணில் கருவிழி என்று நாம் அழைக்கும் பகுதி உண்மையில் நிறமற்ற கார்னியா என்பதாகும். அதற்கு உள்புறம் ஐரிஸ் என்னும் மெல்லிலிய சதைதான் கருப்பாக இருக்கும். அதன் நிறம்தான் வெளியே கருவிழியாகத் தெரிகிறது. அந்த ஐரிஸ் என்பது நடுவில் ஒரு துளையுடனும் சுருங்கி விரியும் தன்மையுடனும் இருக்கும். அந்தத் துளைதான் பாவை ஆகும். அதை ஒட்டி லென்ஸ் இருக்கும்.
பாவை வழியாக உள்ளே செல்லும் ஒளி அலைகள் லென்ஸின் வழியாக ஒளிவிலகல் அடைந்து கண்ணின் கடைசிப் பாகமான விழித்திரையில் விழுகின்றன. அங்கிருக்கும் நரம்புகள் அந்த விளைவை மூளைக்குத் தெரிவிக்க, மூளை அதை உணரும். நாம் பார்க்கும் விஷயம் என்னவென்று நமக்குத் தெரியும்.
வெய்யிலில் அதிக வெளிச்சம் இருக்கும்போது அதிக ஒளி அலைகள் வரும். அவ்வாறு அதிகமாக வரும்போது ஐரிஸ் விரிந்து பாவையை சுருங்க வைக்கும். நிழலுக்கு அல்லது வெளிச்சம் குறைவான பகுதிக்கு வரும்போது ஐரிஸ் சுருங்கி பாவையை விரிய வைக்கும். அவ்வாறு கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.
திடீரென்று வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கோ, வெயிலிலில் இருந்து நிழலுக்கோ வரும்போது ஐரிஸ் விரிய எடுத்துக்கொள்ளும் ஒரு கணம் ஒளி போதாததால் லேசாக இருட்டும்.
Summary
Why do our eyes darken when we move from the sunlight into the shade?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இது தெரியுமா? மின்சாரக் கம்பிகளில் காக்கை குருவிகளுக்கு ஷாக் அடிக்காதது ஏன்?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு


