பிஞ்சுக் காய்கள் நஞ்சல்ல
கொஞ்சும் குழந்தை போல
சஞ்சல நோயைப் போக்கும்
சஞ்சீவி மருந்தே காய்கள்
-
வெண்டைப் பிஞ்சு உடலில்
உண்டாகும் சூட்டைக் குறைக்கும்
கண் எரிச்சலைக் கணத்தில் நீக்கும்
அண்டாது சண்டாள நோய்கள்
-
வாழைப் பிஞ்சு வாகாய்
வயிற்றுப் புண்ணை ஆற்றும்
வெள்ளரிப் பிஞ்சு நாக்கு
வறட்சியை நீக்கி தாகம் தணிக்கும்
-
முருங்கைப் பிஞ்சைத் தோலுடன்
முறையாக உண்டு வந்தால்
வருத்தும் மூலமும் குணமாகும்
உறுத்தும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்
-
பலாப்பிஞ்சு உடலுக்கு வலுவூட்டும்
நிலாப் போல மேனி மினுமினுக்கும்
வலுவான உடலைத் தாக்காது
விரண்டு ஓடும் நோய்கள்
-
பச்சைக் காய்களை கனிகளை
பசுமைக்கீரைகளைப் புசித்து
நச்சு நோய்கள் அணுகாது
நாளும் நலமாய் வாழ்வோம்!
மு.அ.அபுல் அமீன், நாகூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொழுப்பு பிரச்னையால் இந்திய ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு!

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
சமையல் டிப்ஸ்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுப் பாதிப்புகள் நீங்க...
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

