நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இது தெரியுமா? மனிதர்கள் எப்போது பேசக் கற்றுக் கொண்டார்கள்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

talking

இது தெரியுமா? மனிதர்கள் எப்போது பேசக் கற்றுக் கொண்டார்கள்? - கோப்புப்படம்

Published On :

மனிதர்கள் எப்போது பேசக் கற்றுக் கொண்டார்கள்? மொழி என்பது எப்படி உருவானது?

சார்லஸ் டார்வினின் கொள்கையான பரிணாம வளர்ச்சிதான் மனிதனைப் பேச வைத்தது என்கிறார்கள் பல ஆராய்ச்சியாளர்கள்.

அப்படியானால், மனிதனைப் போலவே விலங்குகளும் பறவைகளும் ஏன் பேசவில்லை? மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே விலங்குகளும் பறவைகளும் உலகில் இருக்கின்றனவே, அவை பரிணாம வளர்ச்சி அடைந்துதானே இருக்கும். அவை மட்டும் ஏன் பேசவில்லை, அவற்றுக்கு ஏன் மொழிகள் இல்லை என்ற கேள்விளும் இருக்கின்றன. இதற்கும் பலவித பதில்கள் உள்ளன. ஆனாலும் அவையெல்லாம் முழுமையான முடிவான பதில்களாக இல்லை.

சரி, மனிதன் மட்டும் எப்படிப் பேசக் கற்றுக் கொண்டான் என்று பார்த்தால் மனித மூளை மற்ற உயிரினங்களின் மூளையை விட மிகவும் மேம்பட்டதாக இருப்பதுதான் என்கிறார்கள்.

ஆனால், இன்னும் இந்த ஆண்டுதான் அல்லது இந்தக் காலத்தில்தான் மனிதன் பேச ஆரம்பித்தான் என்று யாராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

சிலர், மனிதன் பேசவும் மொழியைப் பயன்படுத்தவும் ஆரம்பித்து வெகு காலத்துக்குப் பிறகுதான் இப்போது நாம் இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறான் என்று கூறுகிறார்கள். ஒரே நாளில் வந்தது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஏனெனில் நாம் இன்னும் கற்றுக் கொண்டேதானே இருக்கிறோம், புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோமே?

Summary

Regarding rare information that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.