உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விடுகதைகள்

அள்ளமுடியும்; ஆனால், கிள்ளமுடியாது. அது என்ன?

Published On :

அள்ளமுடியும்; ஆனால், கிள்ளமுடியாது. அது என்ன?

விடை: தண்ணீர்

தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். அது என்ன?

விடை: நெருப்பு

நூல் நூற்கும், ராட்டை அல்ல; ஆடை நெய்யும், தறியும் அல்ல. அது என்ன?

விடை: சிலந்தி

சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான். அவன் யார்?

விடை: செங்கல்

மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி. அவன் யார்?

விடை: வெங்காயம்

பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்கமுடியவில்லை. அது என்ன?

விடை: முதுகு

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?

விடை: காற்று

ஏழை படுக்கும் பாய், எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை. அது என்ன?

விடை: பூமி

பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம். அது என்ன?

விடை: வானம்

பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப்பட்டையை நீக்கி, முன்னே வர்றாள் சீமாட்டி. அவள் யார்?

விடை: வாழைப்பூ

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.