பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆனைமலை காப்பகத்தில் மர்ம பை: தீவிரவாதிகள் குறித்து தேடல்

பொள்ளாச்சி, டிச.5: கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (டிச.3) ஆனமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பையில் 5 கத்திகள், நைலான் கயிறுகள், ஒரு கிலோ உப்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:55 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, டிச.5: கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (டிச.3) ஆனமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பையில் 5 கத்திகள், நைலான் கயிறுகள், ஒரு கிலோ உப்பு, மலையேற்றத்துக்கு உபயோகப்படும் கொக்கிகள், ஆனைமலை மற்றும் பரம்பிக்குளம் பகுதி வரைபடங்களின் ஜெராக்ஸ் பிரதிகள் 17 (இவை இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை) ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகள் யாரேனும் இதனை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி, தேடுதல் வேட்டையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தப் பை கண்டெடுக்கப்பட்ட இடம் கேரள எல்லையில் இருந்து 200 மீட்டர் தொலைவு. பையைக் கண்டெடுத்த வனச்சரகர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப் படை போலீஸார் கருப்பசாமி தலைமையில் 65 பேரும், வனத்துறையினர் 20 பேரும் இணைந்து கூட்டாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.