வேறு மொபைல் நிறுவனத்துக்கு மாறுவது எப்படி?

# # இந்தச் சேவைக்கு கட்டணமாக புதிய சேவை நிறுவனம் அதிகபட்சமாக ரூ.19 வரை வசூலிக்கும்.
வேறு மொபைல் நிறுவனத்துக்கு மாறுவது எப்படி?
Updated on
1 min read

செல்போன் எண்ணை மாற்றாமலே சேவை தரும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

ஏற்கெனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது ப்ரீ-பெய்டு அல்லது போஸ்ட்-பெய்டு இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.  எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.

  இவ்வாறு நிறுவனத்தை மாற்றிக் கொள்வதற்குக் கட்டணம் உண்டு. ஆனால்  பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7 நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.

மாறுவது எப்படி?

  • செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு முதலில் UPC (Unique Porting Code) என்கிற எண்ணைப் பெறவேண்டும். 



  • அதைப் பெறுவதற்கு செல்போனில் இருந்து PORT செல்போன் எண் என டைப் செய்து 1900 எனும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணம்: PORT 900000001



  • எட்டு இலக்க யுபிசி எண் கிடைக்கும். அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.



  • இந்த எண்ணை எடுத்துக் கொண்டு தாங்கள் விரும்பும் புதிய சேவை நிறுவன மையத்துக்குச் சென்று அங்கு தரப்படும் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பித் தர வேண்டும்.



  • இதன் பிறகு புதிய சேவை நிறுவனம் புதிய சிம் கார்டு வழங்கும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படலாம்.



  • அந்த சிம்கார்டு செயல்படத் துவங்கும் நேரத்தில் இருந்து புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும்.

குறிப்புகள்

  • சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஆகிய இரு தொழில்நுட்பங்களில் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தாலும் மற்ற தொழில்நுட்பத்துக்கு மாறிக் கொள்ள முடியும்



  • அதேபோல் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களுக்கு இடையேயும் மாறிக்கொள்ளும் வசதி உண்டு



  • இந்தச் சேவைக்கு கட்டணமாக புதிய சேவை நிறுவனம் அதிகபட்சமாக ரூ.19 வரை வசூலிக்கும். போட்டியின் காரணமாக இந்தக் கட்டணம் ரத்து செய்யப்படலாம்.



  • ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியும். அதாவது சென்னையில் உள்ள எண்ணை தில்லியில் உள்ள நிறுவனத்துக்கு மாற்ற முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com