

சென்னை, ஜூன்.5: மறைந்த இஸ்லாமிய சமுதாயத்தின் முதுபெரும் தலைவர் காயிதே மில்லத்தில் 116-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இஸ்லாமிய சமுதாயத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் நிறுவனத் தலைவர் மறைந்த காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.