தற்போதைய செய்திகள்
விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளபதி கைது
கொழும்பு, மார்ச் 4- விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கியத் தளபதி ஒருவர் திரிகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ராணுவத்துக்கு எதிரான பல்வேறு தாக்குதல்க
கொழும்பு, மார்ச் 4- விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கியத் தளபதி ஒருவர் திரிகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ராணுவத்துக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை அவர் திட்டமிட்டவர் என்றும், ராணுவத்துடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் அவர் ஊனமடைந்துள்ளார் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், அவரது பெயர் உட்பட மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவரிடம் புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அந்த இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
