மதுரை, நவ. 21: மதுரை நகர் வண்டியூர் மற்றும் புறநகர்ப் பகுதியில் வீடுகளில் தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைக் கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல்.
மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த, பூ கட்டி விற்பனை செய்யும் பெண்கள் சிலர், மதுரை புறநகர்ப் பகுதியில் வீடுகளில் பெண்களிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி, 27 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துள்ளதுள்ளனர்.
மடிப்பிச்சை கேட்கிறோம் என்று கூறி, கணவர், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் நேர்த்திக்கடனாக இப்படிக் கேட்கிறோம் என்று கூறி இவர்கள் பல வீடுகளில் பெண்களிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்படியே மடங்கும் பெண்களிடம் உங்கள் வீட்டிலும் தோஷம் இருந்தால் எங்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படித்தான் செய்தார்கள் என்று கூறி நகைகளை வாங்கி பூஜை செய்வதுபோல் போக்குக்காட்டி, வாங்கிக் கொண்ட நகைகளில் குறிப்பிட்ட அளவைத் திருடிக்கொண்டு மீதத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடுவார்களாம்.
இதுதொடர்பாக மீனாட்சி, சாந்தி, ஜெயா, மணிமேகலை ஆகிய 4 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கணவருக்குத் தெரியாமல் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த மோசடி தொடர்பாக மேலும் சில ஆண்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.