திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கு ஓட்டு? தங்கபாலு விளக்கம்

மதுரை, அக்.10: திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தெரியும் என்று மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  தங்கபாலு விளக்கம் அளித்தார். தமிழகத்தில் நடைபெறு
Updated on
1 min read

மதுரை, அக்.10: திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தெரியும் என்று மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  தங்கபாலு விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மட்டும்தான் காங்கிரசுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்து வருகிறோம். இடைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்குத் தெரியும்.

இனி மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் அமையும். இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். அதற்கு முன்னோட்டம்தான் இந்தத் தேர்தல். காங்கிரஸின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கொள்கையுடையவர்களை காங்கிரசில் இணைய வரவேற்போம். காங்கிரஸ் தலைமையில் இனி தேர்தலைகளை எதிர்கொள்வோம் என்றார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com