மதுரை, அக்.31: மதுரை திருமங்கலம் அருகே குண்டாற்றுப் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, திருமங்கலம் குண்டாற்றுப் பாலத்தருகே வந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க வண்டியைத் திருப்பிய போது, கட்டுப்பாடு இழந்த பஸ் ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.