அரூர், செப்.1: அரூர் அருகே கோட்டப்பட்டி செல்லும் சாலையில் டெம்போ வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மணப்பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.
சித்தேரி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு திருமண கோஷ்டியினர், சித்தேரி பகுதி கிராமமான சூரியக்கடை என்னும் இடத்தில் திருமணம் முடிந்த பிறகு ஒரு டெம்போ வேனில் திரும்பினர். சித்தேரி மலைப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வேறொரு கிராமத்துக்கு அவர்கள் சென்றனர். இன்று மாலை 5 மணி அளவில் அவர்கள் சென்ற வேன் கட்டுப்பாடை இழந்து, தீர்த்தமலை அருகில் உள்ள மலைப்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்தது. இதில், மணப்பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு வேன் டிரைவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
காலையில் திருமணம் முடிந்து மாலை நேரம் ஆவதற்குள் மணப்பெண் விபத்தில் பலியானது உடன் வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.