பரமக்குடி கலவரத்தில் காயமடைந்தவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல்

மதுரை, செப்.18: மதுரை அரசு பொது மருத்துவமனையில், பரமக்குடி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். இன்று காலை 6.20 மணி அளவில் மதுரை அரசு பொது மருத்துவம
Updated on
1 min read

மதுரை, செப்.18: மதுரை அரசு பொது மருத்துவமனையில், பரமக்குடி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்று காலை 6.20 மணி அளவில் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருந்த எதிர்க் கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் செலவழித்தார். அப்போது, பரமக்குடி கலவரத்தில் காயமுற்று, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கியதுடன், பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றையும் கொடுத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பெசியபோது., தான் சொந்த வேலையாக மதுரை வந்ததாகக் கூறினார். இந்த சந்திப்பு திட்டமிடப்படவில்லை. இருப்பினும் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்ததாகவும் கூறினார். மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாகவும், தங்களை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் தன்னிடம் கூறினர் என்றார் விஜயகாந்த். இந்த இடத்தில் அரசியல் கேள்விகள் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு, இன்று காலையே சென்னை திரும்புவதாகக் கூறி உடனே மதுரை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com