விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பங்களாவில் பிடிபட்ட நல்ல பாம்புகள்
விருதுநகர், செப்.23: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பங்களாவில் உள்ள தோட்டத்தில் சுற்றித் திரிந்த 20 பாம்புகளை வெள்ளிக்கிழமை பாம்பு பிடிப்பவர்கள் மகுடி ஊதி பிடித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே மகளிர் குழு அரங்குக்கு பின்புறம் ஆட்சியரின் பங்களா உள்ளது. இங்குள்ள தோட்டத்தில் பங்களாவுக்கு வந்து செல்கின்றவர்களுக்கு இடையூறாக நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் பாதுகாவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்கூட சிமெண்ட தரையில் பாதுகாப்பாக நிற்க வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி பகுதியிலிருந்து பாம்பு பிடிப்பவர்களை வனத்துறையினர் அழைத்து வந்தனர். அவர்கள் வளாகத்துக்குள் வந்து ஊதிய மகுடிச் சத்தம் கேட்டு நல்ல பாம்புகள் சீற்றத்துடன் வெளி வந்தன. தொடர்ந்து கருஞ்சாரை, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகள் வெளிவந்தன. மொத்தம் 10 நல்ல பாம்புகள், 8 சாரைப்பாம்புகள், 2 கட்டுவிரியன் என பிடிப்பட்ட பாம்புகள் அனைத்தையும் மரப்பெட்டிக்குள் அடைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்குள் விடுவதற்காக பாதுகாப்பாக வனத்துறையினர் எடுத்துச் சென்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.