நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

நாமக்கல், ஆக.3: நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் தலைமை ஆசிரியர்கள் 77 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை
Updated on
1 min read

நாமக்கல், ஆக.3: நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் தலைமை ஆசிரியர்கள் 77 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை வழங்கி வருகிறது. இந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 83 பள்ளிகள் இந்த உதவித்தொகையினைப் பெற்று வருகின்றன. இந்த வகையில், இந்தக் குழந்தைகளுக்கு உதவித் தொகையாக ரூ. 1850ஐ பள்ளிகளுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அளித்து வருகிறது.

ஒரு பள்ளியில் இந்த வகையில் உண்மையான குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டாமல், மிகையாகக் கூட்டிக் கணக்கு காண்பித்து, ஆதி திராவிடர் நலத்துறைக்கு அனுப்பி, அவர்கள் மூலம் இந்தத் தொகையைப் பெற்று முறைகேடு செய்துள்ளனர். இது ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அண்மையில் 3 ஆசிரியர்கள் இதுதொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகத்தில் இருந்து பள்ளிக் கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. இந்த சுற்றறிக்கை படி, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இதை அடுத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com