கல்வி உதவித் தொகை முறைகேடு : அதிகாரி பணியிடை நீக்கம்

நாமக்கல், ஆக., 25 : சுகாதாரமற்ற பணிகளைச் செய்யும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாமக்கல்லில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்க
Updated on
1 min read

நாமக்கல், ஆக., 25 : சுகாதாரமற்ற பணிகளைச் செய்யும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நாமக்கல்லில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஆதிதிராவிட நலத் துறை கண்காணிப்பாளர் மற்றும் நலத்துறை அதிகாரிக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வருவாய்துறை செயலருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், ஆதி திராவிடர் நலத் துறை கண்காணிப்பாளர் உமாபதி 2 வாரத்துக்கு முன்பே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை அலுவலர் ராமச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் துறை செயலர் ஞானதேசிகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com