

நாஞ்சில் சம்பத் விலகல் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
மதுரையில் மதிமுக மாநகர் மாவட்ட செயலர் பூமிநாதன் மகள் திருமண விழாவில் பங்கு கொள்வதற்காக வந்திருந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வரும் டிச.12ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் தொடங்கும் என்றும், டிச. 25ம் தேதி மதுரையில் நிறைவு பெறும் என்றும் கூறினார்.
தென்மாவட்ட மக்கள் ஜாதி மதங்களைக் கடந்து சகோதர பாசத்துடன் பழகுவர் என்றும், அவர்களிடம் பிரிவினை கூடாது என்றும் கூறிய வைகோ, மதிமுகவுக்கு இது சரியான தருணம் என்றார்.
இந்நிலையில், மதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு, பின்னர் நேற்று அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வைகோ, நாஞ்சில் சம்பத் குறித்து சொல்வதற்கு எதுவுமில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.