இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில் டிச.10-ல் புதுதில்லியில் தர்ணா போராட்டம்

இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில் புதுதில்லி ஜந்தர் மந்தரில் டிச.10-ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில் புதுதில்லி ஜந்தர் மந்தரில் டிச.10-ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 மஞ்சள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி மத்திய அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிச.10-ம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்தரில் டிச.10-ம் தேதி காலை 11 மணிக்கு தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
 தர்ணாவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி. அ.கணேசமூர்த்தி தலைமை வகிக்கிறார். பல்வேறு மாநில எம்.பிக்கள் ருத்ரமாதவராய் (பிஜுஜனதாதளம், ஒடிசா), என்.நாகேஸ்வரராய் (தெலுங்குதேசம், ஆந்திரம்), மதுயக்சி (ஆந்திரம்) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் ராஜ்நாத்சிங் மற்றும் நாடு முழுவதும் இருந்து 1,200 மஞ்சள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 180 மஞ்சள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
 மஞ்சள் உற்பத்தியாளர் சங்கங்களை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவதுபோல மஞ்சள் உற்பத்தியாளர்களே மஞ்சள் விலையை நிர்ணயிக்கும் வகையில் தேசிய மஞ்சள் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டும். ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு ரூ.9,000 வரை பொருளீட்டுக்கடன் வழங்க வேண்டும். மஞ்சளை மூலிகை பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து மஞ்சளை நீக்க வேண்டும். மஞ்சளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com