ஆளும் கட்சியாக இருப்பதால் அதிமுகவை விமர்சிக்கிறோம்:தேமுதிக சந்திரகுமார்

ஆளும்கட்சியாக இருப்பதால் அதிமுகவை விமர்சிக்கிறோம் என்று தேமுதிக கொள்கை பரப்புசெயலர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்...
Updated on
1 min read

ஆளும்கட்சியாக இருப்பதால்தான் அதிமுகவை நேரடியாக விமர்சிக்கிறோம் என்று தேமுதிக கொள்கைபரப்புச்செயலர் வி.சி.சந்திரகுமார் கூறினார்.
 ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 21-வது வார்டு முருகேசன்நகர் பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான நவீன சமுதாயக்கூட கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 தேமுதிக தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆளும்கட்சியை விமர்சிப்பது ஜனநாயகரீதியாக சரியான செயல். ஆளும்கட்சியாக இருக்கும்போது திமுகவை கடுமையாக விமர்சித்தோம். இப்போது அதிமுக ஆளும்கட்சியாக இருப்பதால் விமர்சனம் செய்கிறோம்.
 அதற்காக எம்.எல்.ஏ.க்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்குகளை அதிமுக அரசு பதிவு செய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்காக தேமுதிக தொடர்ந்து குரல் கொடுக்கும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றார்.
 இந்நிகழ்ச்சியில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர் இமயம் என்.எஸ்.சிவக்குமார், மாவட்டப் பொருளாளர் டி.நமச்சிவாயம், மாவட்ட துணைச்செயலர் ஏசையன், மாமன்ற உறுப்பினர் வீனஸ் பழனிச்சாமி (எ) விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com