பழைய, புதிய கார்கள் கண்காட்சி:ஈரோட்டில் டிச.28-ல் தொடக்கம்

பழைய, புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி ஈரோட்டில் டிச.28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Updated on
1 min read


பழைய, புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி ஈரோட்டில் டிச.28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
 இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்டோமொபைல்ஸ் அன்ட் மில்ஸ் ஸ்டோர்ஸ் சங்கத் தலைவர் என்.நாகராஜன் கூறியது:
 ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு கார் இருக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. ஆனால், அவை குறித்து முழுமையான விவரங்களை பொதுமக்கள் இன்னும் பெறவில்லை. எனவே, கார்கள், இரு சக்கரவாகனங்கள் பற்றிய முழுத்தகவல்களையும் பொதுமக்கள் பெறும் வகையில் பழைய, புதிய கார்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
 இக்கண்காட்சி டிச.28 முதல் 30-ம் தேதி வரை பழையபாளையம் பரிமளம் மஹாலில் நடைபெறும். இக்கண்காட்சியில் 1916-ம் ஆண்டுக்கு பின் வந்த பழைய மாடல் கார்கள், இப்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாடல் கார்கள், கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார்கள், பழைய, புதிய மாடல் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் இடம்பெறும்.
 உள்நாட்டு, வெளிநாட்டு வாகனங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறும். கண்காட்சியை மதராஸ் ஆட்டோஸ் சர்வீஸ் நிறுவன செயல் இயக்குநர் எஸ்.நாராயணன், டிவிஎஸ் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சியில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் இல்லை என்றார்.
 பேட்டியின்போது மாவட்டச் செயலர் ஆர்.சிவராமன், பொருளாளர் டி.கே.அர்ஜூனன், கண்காட்சி தலைவர் வி.டி.அரசு, செயலர் ஆர்.எஸ்.அருணாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com