அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோவிலில் மண்டல மகோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஞாயிறன்று கொடியேற்றத்துடன் மண்டல மகோற்ஸவ விழா துவங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு கொடி மரத்துக்கு பூஜை செய்தார்.
Updated on
1 min read

ஐயப்பனின் படை வீடுகளில் அரசனாக வீற்றிருக்கும் படைவீடான அச்சன்கோவிலில் நடைபெறும் முக்கியமான விழாவான மண்டல மகோற்ஸவ விழா ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னி்ட்டு அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையில் 8.45 மணிக்கு கொடிமரத்திற்கு பூஜை துவங்கியது.

நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மோகனரு கலந்து கொண்டு 9.30 மணியளவில் கொடியேற்றினார். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தமிழகம், மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் தினந்தோறும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. தினந்தோறும் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சியும்,அன்னதானமும் நடைபெறுகிறது.விழாவின் 9ம்நாளான 24ம்தேதியன்று தேரோட்டமும், 25ம்தேதியன்று ஆராட்டுவிழாவும் நடைபெறுகிறது.

கொடியேற்றம் நிகழ்ச்சியில்,கேரள தேவசம் போர்டு உதவி ஆணையர் பிரகாஷ், அச்சன்கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், கோவில் அட்வசைரி கமிட்டி தலைவர் ராமசந்திரன்நாயர், தென்காசி திருவாபரண பெட்டி வரவேற்பு கமிட்டி அமைப்பு செயலர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com