வங்கிப் பணியாளர்கள் இன்று நடத்தும் வேலைநிறுத்தத்தில் மதுரையில் மட்டும் 3500 பேர் பங்கேற்றுள்ளனர்.
மதுரையில் 35க்கும் மேற்பட்ட வங்கிகளின் 300க்கும் மேற்பட்ட கிளைகளில் பணியாற்றும் சுமார் 3500 வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.