அதிமுகவில் இருந்து 2000 பேர் திமுகவில் சேர்ந்தனர்

அதிமுகவைச் சேர்ந்த 2000 பேர், இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
Updated on
1 min read

அதிமுகவைச் சேர்ந்த 2000 பேர், இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அ.தி.மு.க. வைச் சேர்ந்த சின்மயா நகர் (கலைஞர் நகர்) லோகு தலைமையில் 2000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், “ நீங்கள் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் நேற்றைக்கு வரையிலே; ஆனால் இன்று முதல் நீங்கள் அ.தி.மு.க. அல்ல. நீங்கள் எல்லாம் எங்களுடைய தம்பிமார்கள்.

நீங்களும் எங்களோடு இணைவதிலே, உங்களுடைய மகிழ்ச்சியை இங்கே வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நாளைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற சில பத்திரிகைகளில் தான் இந்தச் செய்தி வரும். பல பத்திரிகைகளில் இந்தச் செய்தி வராது. இருட்டடிப்பு செய்து விடுவார்கள். செய்தி வெளி வந்தால், மறுநாளே அந்தப் பத்திரிகையின் ஆசிரியரைக் கூப்பிட்டு, காதைத் திருகி, நீ எப்படி அந்தச் செய்தியைப் போடலாம் என்று கேட்கக் கூடிய ஆட்சி தான் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நான் நேற்றைக்கே சொன்னேன். பத்திரிகைகள் எங்களுடைய செய்திகளை இருட்டடிப்பு செய்யுமேயானால் இந்தச் சர்க்கார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திகளை வெளியிடக் கூடாது என்று தடுத்து விடுமேயானால், எங்களால், எங்களுடைய நிலையை எடுத்துச் சொல்லவோ, எங்கள் கொள்கைகளை விரித்துரைக்கவோ, எங்கள் லட்சியங்களுக்காகப் பாடுபடவோ, பிரசாரம் செய்ய முடியும். அப்படி ஒரு காலத்திலே நாங்கள் அத்தனை பேரும் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்தக் காலத்திலே அதைச் செய்து தான் வந்தோம். நாடக வடிவத்தில், கவிதை வடிவத்தில், கட்டுரை வடிவத்தில், தெருக்கூத்துகள் வடிவத்தில், சினிமா வடிவத்தில் இப்படி யெல்லாம் இந்த இயக்கத்தை வளர்த்திருக்கிறோம். தியாகங்கள் செய்த இயக்கம், இந்த இயக்கம்.

இந்த இயக்கத்திலே அடிபட்டவர்கள், உதைபட்டவர்கள், சிறை பட்டவர்கள் என்று தியாகம் செய்தவர்களுடைய அந்தப் பட்டியல் தான் பெரும் பட்டியலாக இருக்கும் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com