நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குற்றங்களைக் கட்டுப்படுத்த தண்டனை பெற்று வெளியே வரும் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது நாமக்கல் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 6 மாதங்களில் சேலம் சரகத்திலேயே திருச்செங்கோடு வட்டத்தில் மிக அதிகளவில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தவறு செய்யும் குற்றவாளிகளின் இத்தகையை போக்கை தடுக்கும் விதமாக 106 வழக்குப்பிரிவின் கீழ் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்படுகிறது. நீதிமன்றத்தில் இந்த நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் அளிக்கும் குற்றவாளிகள் அடுத்த ஓராண்டுக்குள் எந்த குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையுடன் பழைய குற்றத்துக்கான தண்டனையும் சேர்த்து அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.